Ticker

6/recent/ticker-posts

பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம் - டிஜே வசியுடன் இணைந்தார்!

சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, எந்த ஒரு நிகழ்ச்சியையும் கலகலப்பாக நடத்தும் தனித்திறமையால் அனைவரையும் ஈர்த்து வருபவர். விருது விழாக்கள் முதல் நகைச்சுவை நிகழ்ச்சிகள் வரை, அவரது தொகுப்பு பாணிக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

2016ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்த பிரியங்கா, 2022ஆம் ஆண்டு அவருடன் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு தனது அம்மாவுடன் வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில், எந்த ஒரு வெளிச்சமும் இல்லாமல், கடந்த ஏப்ரல் 16ம் தேதி பிரியங்கா டிஜே வசி என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புதிய வாழ்க்கையை தொடங்கிய பிரியங்கா மற்றும் டிஜே வசிக்கு வயதில் 10 ஆண்டு வித்தியாசம் உள்ளது. வசிக்கு தற்போது 42 வயது, பிரியங்காவுக்கு 32 வயது.

இவர்களின் வாழ்கை இனிதாக அமைய எல்லோரிடமும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Post a Comment

0 Comments