Ticker

6/recent/ticker-posts

13,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட ஓநாய் இனம்

மனிதர்கள் காணாத காலத்தில், 13,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டதாக கருதப்பட்ட Dire Wolf வகையைச் சேர்ந்த ஓநாய்களை, விஞ்ஞானிகள் புதிதாக உயிர்ப்பித்து உலக அளவில் மிகப்பெரிய விஞ்ஞான சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.

சாம்பல் ஓநாயின் மரபணுக்களை மாற்றும் நோக்கில், டிஎன்ஏ தொழில்நுட்பம், குளோனிங் மற்றும் மரபணு எடிட்டிங் போன்ற உயர் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விஞ்ஞானிகள் மூன்று ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த ஓநாய்கள் தற்போது பொதுமக்களுக்கு தெரியாத, பாதுகாப்பான 2,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இடத்தில் வாழ்ந்து வருகின்றன என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த Dire Wolf வகையைச் சேர்ந்த ஓநாய்களில், இரு ஆண் குட்டிகள் 2024 அக்டோபர் 1-ஆம் திகதி பிறந்ததுடன், ஒரு பெண் ஓநாய்க்குட்டி 2025 ஜனவரி 30-ஆம் திகதி பிறந்துள்ளது.

அவர்களுக்கு ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி என Game of Thrones தொடர் கதையில் இடம்பெறும் பிரபல Dire Wolf கதாபாத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

பழங்கால உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பித்து புதிய ஆய்வுகளுக்கு வாயிலாக அமைக்கும் இந்த முயற்சி, மரபணு விஞ்ஞானத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments