மேஷ ராசி: சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
ரிஷப ராசி: மனதில் சரியென பட்டதை செய்ய முடியும். சொந்த பந்தங்கள் உதவியை நாடி வருவர். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
மிதுன ராசி: புதியவர்கள் நட்பு ஆதாயத்தை தரும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடக ராசி: புது பொருள் சேர்க்கை உண்டாகும். பெற்றோருடன் சின்ன கருத்து மோதல்கள் வரும். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்ம ராசி: சவாலான காரியங்களையும் எளிதில் முடிக்க முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கன்னி ராசி: எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம் ராசி: கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
விருச்சிக ராசி: தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். எதிரிகளின் பலம் பாதியாக குறையும். புது பொருள் சேர்க்கைக்கு இடமுண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.
தனுசு ராசி: எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகர ராசி: உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். முக்கிய காரியங்களில் பொறுமையை கையாளவும். பிரியமானவர்களின் வருகை உற்சாகம் தரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கும்ப ராசி: குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். மனதை மகிழ்விக்கும் சம்பவம் ஒன்று நடக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீன ராசி: தெய்வ பக்தி அதிகரிக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
0 Comments